காக்க காக்க

எல்லாருக்கும் இலவச ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுகள். ஸாப்டுங்க....

புளாக்கர் செட்டிங்க்ஸில் மாற்ற வேண்டியவை

சரியான டெம்ப்ளேட்டைப் போட்டுக்கொண்டதுடன், சில முக்கியமான செட்டிங்குகளையும் மாற்றவேண்டும். அவை கீழே தரப்பட்டுள்ளன: மறுமொழிகள் எழுதும் நேரத்தில் தேதி முத்திரை: வழக்கமாக மறுமொழிகள் எழுதப்படும்போது நேரம் மட்டுமே தெரியும். (உ.ம். 11:45 PM ) ஆனால் கூடவே தேதியும் தெரிந்தால்தான் நல்லது. இதற்கு செய்யவேண்டியது கீழே தரபட்டுள்ளது. நேரத்துடன் தேதி காட்டுவதில் பல முறைகள் இருந்தாலும், மாதத்தை எண்ணால் காட்டாமல் எழுத்தால் காட்டும் முறையே மேலானதாகும். ஏனென்றால் அமெரிக்காவில் ஒருமாதிரியும், மற்ற இடங்களில் வேறு மாதிரியும் இந்த மாத/தேதி வரிசை இருப்பதால், சில சமயம் குழப்பம் வரலாம். அதையும் யோசித்து செய்தால் நல்லது.
பிறகு பின்னூட்டங்களை மாடரேஷன் செய்யுமாறு அமைத்துக்கொள்ளவேண்டும். இதனால், போலி, ஆபாச பின்னூட்டங்கள் மற்றவர் பார்வைக்குப் போகும் முன் தடுத்து விடலாம். இதை செய்வது கீழே காட்டப்பட்டுள்ளது. இத்தொடு பின்னூட்டங்களை தனி விண்டோவில் காட்டுவதையும் வேண்டாம் என்று செய்துவிடுதல் நல்லது. ஏனென்றால் நான் கொடுத்துள்ள டைனமில் ஃபாண்ட் நம் வலைப்பதிவு பக்கத்தில் மட்டுமே வேலை செய்யும். இந்தப் புது Pop-up windowவில் கட்டம் கட்டமாகத் தெரிவது இதனால் தவிர்க்கப்படும். அத்துடன் Word verificationஐயும் சேர்த்துக்கொள்வதால், வயாகரா விளம்பரம் போன்ற தேவையற்ற பல பின்னூட்டங்களை தவிர்க்கலாம்.

நீங்கள் அடையும் பயன்

இந்த வலைப்பூவின் டெம்ப்ளேட்(வெட்டு & ஒட்டு, அம்புட்டுதேன். Use ctrl-A inside the textarea below to select all, then ctrl-C to copy):

இந்த டெம்ப்ளேட்டுகளால் வலைப்பூ படிப்பவர்கள் அடையும் பயன்கள்:
  1. View->Encoding-> Unicode (UTF-8)ஏன்று மெனுவில் தேர்வுசெய்யாமலேயே எடுத்த உடனே வலைப்ப்பூ தமிழில் தெரியும். பலர் வலைப்பூவில் இந்த பிரச்னை இல்லை என்றாலும், இன்னும் சில பேருடையது உடனே தெளிவாகத் தெரியாமல் பூச்சி காட்டும். இனி அந்தத் தொல்லை இல்லை.
  2. விண்டோஸ் 98 கணினியிலும் யுனிகோடு ஃபாண்ட் இல்லாமலேயே தமிழில் தெரியும். இப்போது பலருடயது ப்ரௌசிங் சென்டர் களில் கட்டம் கட்டமாய்த் தெரியுது. Dynamic Font டெக்னாலஜியால் இது நடக்கிறது. இந்த டெம்ப்ளேட்டில் சரியாக டைனமிக் ஃபாண்ட் போடப்பட்டுள்ளது. (உமருக்கும் தமிழ்மணத்துக்கும் நன்றி)
  3. கிழமை, மாதம் போன்றவையும் தமிழில் தெரியும். இந்த ஜாவாஸ்க்ரிப்ட் எழுதின புண்ணியவானுக்கு நன்றி. (யார்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க, ப்ளீஸ்)
  4. முக்கியமான தமிழ் வலைப்பூ தளங்களுக்கு சுட்டியும் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
  5. Links, Archives, About Me, Comments போன்ற முக்கியமான தலைப்புகள் தமிழில் இருக்கும்.
  6. மறுமொழிகள் (பின்னூட்டங்கள்) பகுதியில் ஒருத்தர் எழுதியதுக்கும் இன்னொருத்தர் எழுதியதுக்கும் இடையில் ஒரு கோடு போடப்பட்டுள்ளது. பலசமயம் இந்தக் கோடு இல்லாத டெம்ப்ளேட்டுகளால் யார் என்ன எழுதினார் என்று குழப்பம்.
  7. புதுசாக தமிழ்மணம் கொண்டுவந்துள்ள pdf வசதிக்கான tags சரியான இடத்தில் போடப்பட்டுள்ளது.
  8. அதே மாதிரி தமிழ்மணம் கருவிப்பட்டிக்கான codes- ம் சரியாக சேர்க்கப்பட்டுள்ளது.
  9. Comments பகுதியில் Homeக்கு சுட்டி இருக்கும், அதுவும் தமிழில் இருக்கும்

தமிழில் வலைப்பூ எழுதுகிறவர்களுக்கு ஒரு சேவை

அன்பர்கள் பலர் தமிழில் வலைப்பூ வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் டெம்ப்ளேட்டில் ஏகக் கோளாறு. அன்பர்களே, இதோ வந்துவிட்டது அழகான புளாக்கர் டெம்ப்ளேட்டுகள். செய்த உடனே தமிழ்மணம் புதுசாக சில codes (நிரல் துண்டு, ம் பல் உடைகிறது, சொல்வதற்குள்!) கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த டெம்ப்ளேட்டுகள் எனக்குத் தெரிந்த எல்லா சிக்கல்களுக்கும் விடை சொல்லும். என்ன சிக்கல்கள் என்று கேள்வி கேட்பவர்கள், கொஞ்சம் பொறுங்கள்.